வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் திருமாவளவன் எம்.பி பங்கேற்பு

வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் திருமாவளவன் எம்.பி பங்கேற்பு

தொல். திருமாவளவன்

அரியலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மாவட்ட கண்காணிப்பு குழுவின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பங்கேற்று வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.

மேலும் ஊரக வளர்ச்சிதுறை, உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, சுகாதாரதுறை, வருவாய் துறை, வேளாண்மைதுறை, கால்நடை பராமரிப்பு துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மகளிர் திட்ட மேம்பாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு  துறைகளின் அதிகாரிகள், தங்களது துறைகளின் சார்பில்  மேற்கொள்ளபட்டு வரும் திட்டங்கள்  குறித்து எடுத்து கூறினர். இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.