ஆடி கிருத்திகை: பரணி காவடி சுமந்து பக்தர்கள் வ்ழிபாடு...!

ஆடி கிருத்திகை: பரணி காவடி சுமந்து பக்தர்கள் வ்ழிபாடு...!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆடி கிருத்திகையொட்டி திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் மயில் காவடி எடுத்துச் சென்று வழிபாடு செய்தனர்.

வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டு தோறும் திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடிகள் எடுத்து செல்வது வழக்கம். அந்த வகையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, புஷ்ப காவடி, பால் காவடிகளை எடுத்துக் கொண்டு மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க : கோச்சடையான் தயாரிப்பாளருக்கு 6 மாதம் சிறை; உறுதி செய்த அமர்வு நீதிமன்றம்!

அதேபோல், ராணிபேட்டை மாவட்டம் ஆற்காட்டிலும் பரணி காவடி சுமந்தவாறு பாதயாத்திரையாக ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்கு நடைபயணம் மேற்கொண்டனர். பரணி காவடியைச் சுமந்து, அரோகரா முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் நடைபயணம் சென்றனர். இதையடுத்து பரணி காவடி சுமந்து வரும் பக்தர்களுக்கு சாலைகள் முழுவதும் ஏராளமான நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.