எடப்பாடி பழனிச்சாமி கண்மாயை தூர் வாரினாரா?  அல்லது கஜானாவை தூர் வாரினாரா?...அமைச்சர் பெரியகருப்பன்

எடப்பாடி பழனிச்சாமி கண்மாயை தூர் வாரினாரா?  அல்லது கஜானாவை தூர் வாரினாரா? என தெரியவில்லை என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி கண்மாயை தூர் வாரினாரா?  அல்லது கஜானாவை தூர் வாரினாரா?...அமைச்சர் பெரியகருப்பன்
Published on
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில்,

கடந்த அதிமுக அரசு கஜானாவை காலி செய்துவிட்டார்கள். வேலையில் இருந்த பலரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். காலி பணியிடங்களையும் நிரப்பாமல் சென்றுவிட்டனர். தமிழகத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் கடனை அதிமுக அரசு வாங்கி வைத்துள்ளனர். இதையெல்லாம் சமாளித்து  தமிழக முதல்வர் தன்னுடைய மதி நுட்பத்தால் செயல்பட்டு தமிழக அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்றார்.

அதிமுக ஆட்சியில் கண்மாய்கள் தூர்வாரியதால் தான் தற்போது கண்மாய்கள் நிரம்பி உள்ளன என எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார் என்ற கேள்விக்கு.....

அவர் கண்மாயை தூர் வாரினாரா?  அல்லது கஜானாவை தூர் வாரினாரா? என தெரியவில்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சிக்கு சான்றாக திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீத வெற்றியை தமிழக முதல்வர் தலைமையிலான கூட்டணி நிச்சயமாக வெற்றி பெரும் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com