பக்தர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் தீட்சிதர்கள்...அரசாணையை நிறைவேற்ற முயற்சிக்கும் அதிகாரிகள்!

பக்தர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் தீட்சிதர்கள்...அரசாணையை நிறைவேற்ற முயற்சிக்கும் அதிகாரிகள்!
Published on
Updated on
1 min read

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபை ஏறி வழிபட தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிமன்ற உத்தரவுப்படி பதாகை அகற்றப்பட்ட நிலையில், பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபட தீட்சிதர்கள் அனுமதி மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை சிவபக்தர்கள் சிலர் கனகசபையில் ஏறி வழிபட அனுமதிக்கக்கோரி  கோஷங்கள் எழுப்பினர். அப்போது பக்தர்களுக்கு எதிராக பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் கோஷங்களை எழுப்பியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கனகசபையின் மற்றொரு வழியாக ஏறி வழிபட முயன்ற நிலையில், தீட்சிதர்கள் அவர்களை ஏறவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தீட்சிதர்கள் அனைவரும் காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். 

இந்நிலையில் இதுகுறித்து தீட்சிதர்களின் செயலாளர் சிவராமன் மற்றும் வழக்கறிஞர் சந்திரசேகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “கோயிலில் தீட்சிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தடையை மீறி காவல் துறையினர் உதவியுடன் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கனகசபையில் ஏறியுள்ளதாகவும் குற்றm சாட்டினர். 

இதுகுறித்து அரசு தரப்பில் தெரிவிக்கும்போது, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் அரசாணையை நிறைவேற்ற முயன்ற நிலையில், அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com