திண்டுக்கல்: தொடர்ந்து பெய்து வரும் மழை.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

திண்டுக்கல்: தொடர்ந்து பெய்து வரும் மழை.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

பழனியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குதிரையாறு அணை மற்றும் பாலாறு - பொருந்தலாறு அணைகள் அதன் முழுக்கொள்ளளவை எட்டும் தருவாயில் இருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணைகளின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம்  பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 66 அடி உயரம் கொண்ட வரதமாநதி அணை முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து 600 கனஅடி நீர் சண்முக நதியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பாலாறு-பொருந்தலாறு அணை நீர் மட்டம் 62 அடியாக உயர்வு

 அதேபோல் பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர் மட்டம் உயர்ந்து 62 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், தொடர்மழை காரணமாக 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணையின் நீர் மட்டம் தற்சமயம் 77 அடியாக உள்ளது.

பாலாறு-பொருந்தலாறு அணை நீர் மட்டம் 62 அடியாக உயர்வு

இந்நிலையில், பாலாறு மற்றும் குதிரையாறு அணைகளின் பாதுகாப்பு கருதி அதிகப்படியான தண்ணீர் திறக்கவுள்ளதால், சண்முக நதி மற்றும் அமராவதி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.