பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்திய பெண்கள்! திண்டிவனத்தில் பரபரப்பு!

பாதாள சாக்கடை திட்டத்தின் சேமிப்பு கழிவு தொட்டியை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து JCB - யால் தோண்டப்பட்ட பள்ளத்தில் பெண்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்திய பெண்கள்! திண்டிவனத்தில் பரபரப்பு!
Published on
Updated on
2 min read

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 24-வது வார்டு பகுதியான இந்திரா நகர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் திண்டிவனம் பகுதியில் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற பாதாள சாக்கடை திட்டத்தின் சேமிப்பு கழிவுநீர் தொட்டியை  இந்திரா நகர் பகுதியின்  மையப்பகுதியில் கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பகுதியில் குடிநீர் தொட்டி, அங்கன்வாடி மையம், சிறுவர்கள் விளையாட்டு மையம் ஆகியவை மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது நியாய விலை கடையும்  இங்கு அமைக்கப்பட உள்ளது. எனவே இந்த இடத்தில் பாதாள சாக்கடை சேமிப்பு கழிவு நீர் தொட்டியை கட்ட வேண்டாம் எனக் கூறி நேற்று நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் பொதுமக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

இருப்பினும் இன்று தொடர்ந்து அந்த பகுதியில் ஜேசிபி எந்திரம்  மூலமாக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. தகவல் அறிந்து அங்கு சென்ற பொதுமக்கள், ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டு பணிகள் செய்ய வேண்டாம்  என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் பொதுமக்களிடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இருப்பினும் பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் உடன்படாமல்  பெண்கள் ஜே சி பி இயந்திரத்தின்  மூலமாக தோண்டப்பட்ட பள்ளத்தில் அமர்ந்து பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் நகர மன்ற தலைவருக்கும், பொதுமக்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் நகர மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். பின்பு பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக தோண்டப்பட்ட பலத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு மூடினார்கள். இதனால் இந்த பகுதியின் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com