ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்தார் இயக்குனர் ஞானவேல்...

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து அப்படத்தின் இயக்குநர் ஞானவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்... 
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம்  தெரிவித்தார்  இயக்குனர் ஞானவேல்...
Published on
Updated on
1 min read

அந்த அறிக்கையில், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம் , பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் 'பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்திற்காக மட்டுமே நடிகர் சூர்யா இதில் நடித்தார். காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகும் இதில் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது அனைவருக்கும் புரியும் என நம்பினேன். குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அந்த காலண்டரை காட்டுவது தங்களின் நோக்கம் அல்ல. சில வினாடிகள் மட்டுமே வரும் அந்த காலண்டர் படப்படிப்பின் போது தங்கள் கவனத்தில் பதியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிஷ்டவசமானது. இயக்குநராக தாம் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயம் இது. தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. இதன்பொருட்டு மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com