தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்க- எம்.பி கனிமொழி!

தமிழகத்தை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு மற்ற மாநில மற்றும் மத்திய அரசுகள், காலநிலையில் மாற்றத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என கனிமொழி எம்.பி. கேட்டுக் கொண்டார்.

காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவுடன் இணைந்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. சென்னை பெரியமேட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன், பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, வேல்முருகன், எம்.எல்.ஏ, கனிமொழி எம்.பி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி, தமிழகத்தை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு மற்ற மாநில மற்றும் மத்திய அரசுகள், இந்த காலநிலையில் மாற்றத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய தொல் திருமாவளவன், பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுகள் பாடப்புத்தகத்தில் சேர்த்து பயிற்றுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.