கருணாநிதியின் நூற்றாண்டு விழா, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து விவாதம்!

கருணாநிதியின் நூற்றாண்டு விழா, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து விவாதம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சரின் நூற்றாண்டு விழா, அரசு சார்பிலும் திமுக சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. இது தவிர புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, ஆகஸ்ட் 7 ஆம் தேதி கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படவுள்ளது. 

இதையும் படிக்க : மீனவர் பிரச்சினைப் பற்றி விவாதிக்கப்பட்டதா? வைகோவின் கேள்வி, அமைச்சரின் பதில்!

இந்நிலையில், இன்று காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரின் நினைவு நாள், நூற்றாண்டு விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.