
கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசனை விட, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 1600 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக கூறி கோவை தெற்கு தொகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியை சேர்ந்த கே.ராகுல் காந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் தேர்தல் வழக்கில், எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.