இணை ஒருங்கிணைப்பாளர் பெயரை சொல்ல மறுத்த ஓபிஎஸ்...!

இணை ஒருங்கிணைப்பாளர்  பெயரை சொல்ல மறுத்த ஓபிஎஸ்...!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் ஓட்டு கேட்டு செல்பவர்களுக்கு தற்போது மரியாதை இல்லை என ஓபிஎஸ் சாடியுள்ளார். 

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஸ் ஆதரவு மாவட்ட செயலளார்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் சட்ட விதியை எந்த அளவு சிதைக்க முடியுமோ அந்த அளவு சிதைத்து கடந்தாண்டு ஜூன் 23ஆம் தேதி அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சாடினார். மேலும் எடப்பாடி பழனிசாமி பெயரை கூட உச்சரிக்க விரும்பவில்லை, அந்த தகுதியை எடப்பாடி பழனிச்சாமி இழந்துவிட்டதாக ஆவேசத்துடன் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை முடிவு செய்வதற்கு தன்னுடைய கையெழுத்து தான் அதிகாரப்பூர்வமானதாக இருந்ததாகவும், பெருந்தன்மையுடன் அதனை தான் விட்டுக் கொடுத்ததாகவும் ஓபிஎஸ் கூறினார். அதுமட்டுமின்றி தற்போது வாக்கு கேட்டு செல்லும் அதிமுகவினருக்கு அங்கு மரியாதை இல்லை எனவும் சாடினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com