வீடுகள், தனியார் இடங்களில் வைத்து வழிபட்ட சிலைகள் உரிய பாதுகாப்புடன் நீர் நிலைகளில் கரைப்பு

கோவையில், வீடுகள் மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. 

வீடுகள், தனியார் இடங்களில் வைத்து வழிபட்ட சிலைகள்  உரிய பாதுகாப்புடன் நீர் நிலைகளில் கரைப்பு

தமிழகத்தில் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக சென்று, சிலைகளை கரைக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில், சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று, கரைக்கவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வீடுகளில் விநாயர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்து அமைப்பினர், தடைகளை மீறி பொது இடங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளை வைத்து, வழிபாடு நடத்தினர்.  

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, தடையை மீறி வைக்கப்பட்ட சிலைகளை பறிமுதல் செய்து,  நீர் நிலைகளில் கரைத்தனர். அத்துடன், வீடுகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் உரிய பாதுகாப்புடன் கரைக்கப்பட்டு வருகின்றன.

பொதுவாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று நாட்களுக்கு பின்னர் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா தொற்று காரணமாக, இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆர்.எஸ் புரம் முத்தண்ணன் குளத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிலைகள் கரைக்கும் பணி நடைaபெற்றது.