மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி: ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி:  ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. 

திருச்சி மாவட்ட சிலம்பம் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், 10 வயதிற்குட்பட்டோர் மற்றும் 14, 15, 16 வயதிற்குட்பட்டோருக்கான மினி சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன. நடுக்கம்பு, ஒற்றை சிலம்பம் மற்றும் சுருள் வாள்வீச்சு உள்ளிட்ட  பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிலம்ப கலைக்கூடம் மற்றும் சிலம்ப பயிற்சி மையங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள்  பங்கேற்று தங்களது திறமைகளை  வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெறுவோர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.