
இதுகுறித்து பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார். திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 18-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.