வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிக்க, மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!

வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிக்க, மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!

தமிழ்நாட்டின் அரசு வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக புதியதாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய அணைகள் கட்டும் பணி, நீர்நிலைகளை மீட்டெடுத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், உள்ளிட்ட பணிகளை கண்காணிக்கவும். பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, உள்ளிட்ட பணிகளை கண்காணிப்பதற்காகவும் புதிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மேலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துடன் செயல்பட்டு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் அரியலூா் மாவட்டத்திற்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்துறை செயலா் அருண்ராய், கோவை மாவட்டத்துக்கு டிட்கோ நிா்வாக இயக்குநா் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு எரிசக்தித் துறைச் செயலா் ரமேஷ் சந்த் மீனா, நாமக்கல் மாவட்டத்திற்கு தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலா் குமரகுருபரன், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நில நிா்வாக ஆணையா் எஸ்.நாகராஜன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மனிதவள மேலாண்மைத் துறைச் செயலா் நந்தகுமாா், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், சேலம் மாவட்டத்திற்கு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாக இயக்குநா் சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 25 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமித்திருந்த நிலையில் தற்போது கூடுதலாக 12 மாவட்டங்களுக்கு மாநிலத்தின் திட்ட வளர்ச்சி பணிகளுக்காக புதிய அதிகாரிகள் நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துக்கு ஜோடியாக திரிஷா!