இன்றுடன் நிறைவடைகிறதா ? மீண்டும் நீட்டிக்கப்படுகிறதா ? - மின்சாரத்துறை அமைச்சர் ஆலோசனை 

இன்றுடன் நிறைவடைகிறதா ? மீண்டும் நீட்டிக்கப்படுகிறதா ? - மின்சாரத்துறை அமைச்சர் ஆலோசனை 

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளனர் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மீதமிருக்கும் ஒரு சதவீதம் பேரையும் இணைப்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு வைத்து அதிகாரப்பூர்வமாக அதைக் குறித்த தகவல் அறிவிக்கப்பட உள்ளது.

ஆதார் எண்ணை இணைக்காதவர்களை நேரில் சந்தித்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தவும் மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:   முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன்....!!!