“உட்கட்சி விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டாம்” -  இபிஎஸ் மனுவிற்கு உச்சநீதிமன்றம் கருத்து:

ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருதரப்பும் நட்பு ரீதியாக பேசி பொதுக்குழுவில் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளக் கூறியது மன்றம்.

“உட்கட்சி விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டாம்” -  இபிஎஸ் மனுவிற்கு உச்சநீதிமன்றம் கருத்து:

ஓபிஎஸ் ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழுவை நடத்தலாம்; ஆனால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானத்தின் மீதும் முடிவு எடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவ எதிர்த்து இபிஎஸ் தரப்பில் கடந்த 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழு நடத்த தடை விதிக்க முடியாது. பொதுக்குழுவை நடத்த நீதிமன்றம் வழி காட்ட முடியாது. அதிமுக கட்சி விவகாரங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது ஏன்?” எனக் கேட்டு ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

மேலும் ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், நிவாரணம் தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வில் ஓபிஎஸ் தரப்பு முறையிடலாம் என்றும், இபிஎஸ்-க்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் தடை விதிப்பதாகக் கூறி தீர்ப்பளித்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான சி.வி. சண்முகம், “உட்சட்சி விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையிலே, யூகத்தின் அடிப்படையிலே நீதிமன்றத்தால் எப்படித் தலையிட்டு தீர்ப்பு வழங்கமுடியும் என்று கருத்து கூறிய நீதிமன்றத்தின் அனுமதியோடு, தற்போது, வருகிற ஜூலை 11, அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெறும். உட்கட்சியில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைகளையும், யூகங்களையும் கட்சியால் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் மட்டும் பேசிக் கொள்ளுங்கள். நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டாமே என நீதிபதிகள் கூறிவிட்டனர்” என்று கூறினார்.

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து ஜூலை 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, “தடைக் கோரி நிதிமன்றம் சென்றிருக்கிறோம். தானாகவே நீதிமன்றம் செல்லலாம் எனக் கூறியுள்ளனர். அதனால், அவர்கள் பொதுக்குழு நடத்துவது குறித்து நாங்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், எங்களையும் மன்றத்திற்கு போகலாம் என உத்தரவிட்டுள்ளனர்” என்று கூறினார்.

அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன? வைத்திலிங்கம் பரபரப்புக் குற்றச்சாட்டு-  Dinamani