வீண் பேச்சால் தமிழையும், தமிழர்களையும் குழப்ப வேண்டாம்...வைரமுத்து பேச்சு!

வீண் பேச்சால் தமிழையும், தமிழர்களையும் குழப்ப வேண்டாம்...வைரமுத்து பேச்சு!

தமிழ்நாடு குறித்த ஆளுநரின் பேச்சுக்கு வீண் சர்ச்சையில் ஈடுபட்டு தமிழையும், தமிழர்களையும் குழப்ப வேண்டாம் என கவிப்பேரரசு வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு  வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணன் பங்கேற்று பாடல் பாடினார்.

இதையும் படிக்க : திமுக அரசை வீழ்த்த எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் வீரசபதம்...ஈபிஎஸ் அறிக்கை!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, பொங்கல் தனி மதம், இனம் சார்ந்த பண்டிகை அல்ல; சூரியனையும் , உழவையும் மையப்படுத்தியது தான் பொங்கல், திருவள்ளுவரும் அப்படிதான் என்று வைரமுத்து கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதால் அவர் மதம், நெறி மற்றும் கொள்கையை மாற்றிக் கொள்வாரா என கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழ்நாடு பெயர் குறித்த ஆளுநர் பேச்சுக்கு சொல் ஆராய்ச்சியில்  ஈடுபடுவதா இன்றய தேவை என கேள்வி எழுப்பிய வைரமுத்து , வீண் சர்ச்சையில் ஈடுபட்டு தமிழையும், தமிழர்களையும் குழப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.