” அண்ணாவைப் பற்றி பேச வேண்டாம்” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

” அண்ணாவைப் பற்றி பேச வேண்டாம்”  -  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை முன்னிலைப் படுத்த அண்ணாவைப் பற்றி பேச வேண்டாம் என்று  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.  

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

” சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் குரலாக, பகுத்தறிவை உலகத்துக்கு ஊட்டி பகுத்தறிவு தந்தையாக இருக்கிறார்.

ஒரே இடத்தில் பெரியாருக்கு இரு படங்கள் வைத்து மரியாதை செய்தது  குறித்த கேள்விக்கு:-

” அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தல் படி இன்று  மரியாதை செலுத்தப்பட்டது. தெரியாதவர்கள் பற்றி பேச விரும்பவில்லை சிங்கத்தின் மேல் கொசு உட்கார்ந்தால் பெரிதாகது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளது.கூட்டணி கட்சி தலைவர்கள் மறைந்த தலைவர்கள் மீது விமர்சனங்கள் வைத்தால் எதிர் கருத்து தெரிவிக்கப்படும். அவர் பெயரிலேயே அண்ணா இருக்கிறது இருந்தும்  இப்படி பேசலாமா ?,  இனி அண்ணாமலை அப்படி பேசாமல் இருப்பார் என்று நினைக்கிறேன்.

உங்களை முன்னிலைப்படுத்த என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், அண்ணாவை பற்றி ஏன் பேசுகிறார்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கழகத்தின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

(அமித்சா எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு) கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பது வழக்கம் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க  | இலங்கைத் தமிழர்களுக்கு குடியிருப்புகள் திறந்து வைப்பு...!