வள்ளியூர் முதல் நாங்குநேரி வரை இரட்டை ரயில் பாதை...! இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பு..!

வள்ளியூர் முதல் நாங்குநேரி வரையிலான மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை ரயில் பாதை பணிகள் 90சதவீதம் முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வள்ளியூர் முதல் நாங்குநேரி வரை இரட்டை ரயில் பாதை...!  இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பு..!

மதுரையில் இருந்து நாகர்கோவில் வரையிலான ரயில் மார்க்கத்தில் மின்மயமயமாக்கலுடன் இரட்டை ரயில் பாதை அமைக்கபட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஏற்கனவே வள்ளியூரில் இருந்து ஆரல்வாய்மொழி வரையிலான பகுதியில், சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திலான பணிகள் முடிவடைந்தது. மேலும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய், ஆய்வு செய்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. 

இந்நிலையில் வள்ளியூரில் இருந்து நாங்குநேரி வரையிலான சுமார் 15 கிலோமீட்டர் இரட்டை வழி ரயில் பாதை பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதில் பாதைகள் அனைத்தும் ஜல்லி கற்கள் நிரப்பப்பட்டு மின்சார கம்பங்கள் நிறுவி மின்பாதையாக மாற்றபட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. 

மேலும் நெல்லையிலிருந்து நாங்குநேரி வரையிலான சுமார் 30 கிலோமீட்டர் வரையிலான மீதமுள்ள பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து விரைவில் வள்ளியூரில் இருந்து நெல்லை வரையிலான இரட்டை ரயில்பாதை பணிகள் முடிவடையும் பட்சத்தில், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்வார் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.