திமுக தேர்தலுக்கு முன் நாடகம் - ஆட்சியில் அரச பயங்கரவாதத்தின் அடையாளம் பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக சீமான்

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி பசுமை வெளி விமான நிலைய பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் 145ஆவது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன
திமுக தேர்தலுக்கு முன் நாடகம் - ஆட்சியில்  அரச பயங்கரவாதத்தின் அடையாளம் பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக சீமான்

500 போராட்ட குழுவினர் 

இந்நிலையில் 500-க்கும் மேற்பட்ட போராட்ட குழுவினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராம உரிமை மீட்பு பேரணியில் ஈடுபட்டனர்இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் போராட்ட குழுவினரை தடுத்து நிறுத்தியதால் பதற்றம் நிலவியது. மேலும் அவர்களிடம்  மாவட்ட கண்காணிப்பாளர் பேரணியை கைவிடுமாறு வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்து தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தியும் கருப்புத் துணியால் வாயை மூடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராடக்கூடிய மக்களுக்கு ஆதரவாக டுவீட்டரில் ஆளும் தமிழக மற்றும் மத்திய அரசினை கேள்விகளை எழுப்பி பதிவிட்டுள்ளார். 

சீமான் டுவீட்டர் பதிவு 

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் 146 நாட்களாக தொடர்ந்து போராடி வருவதன் நீட்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று நடைபயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதனை அச்சுறுத்தும் விதமாக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பது

அரச பயங்கரவாதத்தின் அடையாளமாகும்.

மக்களின் தொடர் கோரிக்கையினை மதிக்காமல் வானூர்திநிலையம் அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியதே எதேச்சதிகாரத்தினைக் காட்டும் நிலையில், அதனை எதிர்த்து மக்களாட்சி உரிமைக்கொண்டுப் போராடுபவர்களை அச்சுறுத்துவது கடும் கண்டனத்திற்குரியதாகும்

அழிவுத் திட்டங்களை தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதா?

எனவே, உடனடியாக காவல்துறையினரை அப்பகுதிகளில் இருந்து விலகச் செய்வதோடு உரிய நியாயங்களோடுப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com