"திராவிடர்களால் தான் ஜாதிப்பற்று வளர்க்கப்படுகிறது" - சீமான்

"திராவிடர்களால் தான் ஜாதிப்பற்று வளர்க்கப்படுகிறது" - சீமான்

திராவிடர்களால் திட்டமிட்டு மொழிப்பற்று இனப்பற்று ஊட்டப்படாமல், ஜாதிப்பற்று, மதப்பற்று ஊட்டப்பட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேட்டவலத்தில் நடைபெற்ற  ‘தமிழ் மீட்சியே தமிழர் எழுச்சி’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தமிழரின் சிறப்புகளையும் தமிழ் மொழியின் சிறப்புகளை குறித்து உரையாற்றிய சீமான் இலக்கிய கவிதைகளை பாடினார்.

தொடர்ந்து பேசுகையில்,.. “ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால் படை எடுக்க வேண்டியதில்லை. துப்பாக்கி, பீரங்கி, தோட்டாக்கள் தேவையில்லை; ஒரு உயிர் சாக வேண்டியது இல்லை ஒரு துளி ரத்தம் பூமியில் சிந்த வேண்டியது இல்லை அழித்துவிடலாம்.

அவனுடைய மொழியை அழித்துவிட்டால் அவனுடைய கலை இலக்கியம் பண்பாடு அழிந்துவிடும்; பண்பாடு அழிந்துவிட்டால் இனம் அழிந்து விடும்; இனம் அழிந்து விட்டால் நாடு அழிந்து விடும்; இதுதான் வரலாறு. மேலும் 90% மேலே  மொழி அழிந்துவிட்டது;  திட்டமிட்டு திராவிடர்களால் மொழிப்பற்று இனப்பற்று ஊட்டப்படாமல்  ஜாதிப்பற்று மதப்பற்று ஊட்டப்படுகிறது”,  என மேடையில் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு, தொழிற்சங்க மாநில தலைவர் அன்பு தென்னரசன், மண்டல செயலாளர் கணேசன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பிரகலதா, மாவட்ட தலைவர் பாண்டியன், செயலாளர் இளவரசன் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க    |  "கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் முதலமைச்சர் அச்சத்தில் உள்ளார்" எடப்பாடி பழனிச்சாமி!