முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை.. பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா!!

முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை.. பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாம்பகுளம், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து காலிக் குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சென்ற கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உன உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.