இரவு முழுவதும் கண் விழித்து வாகனம் ஒட்டினாலும், பயணம் முடிந்து ஓய்வெடுக்க இடமில்லை!!

இரவு முழுவதும் கண் விழித்து வாகனம் ஒட்டினாலும், பயணம் முடிந்து ஓய்வெடுக்க இடமில்லை!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சிறப்புப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் குப்பைகளுக்கிடையே ஓய்வெடுத்து வரும் அவலம் அரங்கேறியுள்ளது.

வேளாங்கண்ணியில் திருவிழா நடைபெறும் சமயங்களில் சென்னையிலிருந்தும் மற்ற பகுதிகளில் இருந்தும் அரசு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.

பல இடங்களில் இருந்து வேளாங்கண்ணி புறப்படும் பேருந்துகள், வேளாங்கண்ணி வந்தடைந்தவுடன் பயணிகளை இறக்கிவிட்டு, அருகில் இருக்கும் இடத்தில் நிறுத்தப்படும். பின்னர் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், பேருந்தின் அடியிலும், மரத்தின் நிழலிலும் படுத்து உறங்குவார்கள்.

ஆனால், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஓய்வெடுக்கும் அந்த இடம் குப்பைகளால் சூழ்ந்துள்ளது. இதனால், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரவெல்லாம் கண் விழித்து பேருந்தை இயக்கிவிட்டு, ஓய்வெடுப்பதற்கு சரியான இடம் இல்லாததால், சரியான ஓய்வு மற்றும் உறக்கம் இல்லாமல், அடுத்த நடை பணியை தொடர்வதால், விபத்துக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

திருவிழா சமயங்களில் இது போன்று சிறப்பு பேருந்துகள் இயக்கும் அரசு ஓட்டுநர்களுக்கு தனியாக ஓய்வு எடுக்க வசதிகள் செய்து தர வேண்டுமென, ஓட்டுநர், நடத்துனர் நிலைமையை நேரில் கண்டா பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயிரக்கணக்கான பயணிகளை பத்திரமாக கொண்டு செல்லும் ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கும் நிலையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க || நெல்லையில் தொடரும் அசம்பாவிதங்கள்... பாஜக பிரமுகர் மீது வெறிச்செயல்!!