தி.மு.க எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் டிரைவரின் ஜாமீன் மனு தள்ளுபடி - நீதிமன்றம் உத்தரவு

தி.மு.க  எம்.பி மஸ்தான் கொலை வழக்கில்  டிரைவரின் ஜாமீன் மனு தள்ளுபடி - நீதிமன்றம் உத்தரவு

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் சாவில் மர்மம் 

திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார்.அவரது நெருங்கிய உறவினரான இம்ரான்பாஷா என்பவர் மஸ்தானிடம் டிரைவராக வேலை செய்து வந்தார். மஸ்தான்காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மஸ்தானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது தான் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

Former MP Mastan Died Due To A Heart Attack, In A Sudden Twist In The Case,  The Police Interrogated Four People | கொலை செய்யப்பட்டாரா முன்னாள் எம்பி  மஸ்த ..? திடீர் திருப்பமாக 4 பேரிடம் ...

மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வெற்றி பெற்று உள்ளது - பாஜக விமர்சனம்

சந்தேகம் 5 பேர் கைது 

இந்த  நிலையில்,டாக்டர் மஸ்தான் சாவில் மர்மம் உள்ளதாக அவரது மகன் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி  சந்தேகத்தின் அடிப்படையில் காரின் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரது தம்பியான கவுஸ் ஆதம்பாஷாவையும் போலீசார் கைது செய்தனர். 

DMK former MP Masthan believed dead was murdered, 5 held | நெஞ்சுவலியால்  பலி என கூறப்பட்ட முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை செய்யப்பட்டது அம்பலம்;  உறவினர் உள்பட 5 பேர் ...

இந்த நிலையில், கவுஸ் ஆதம் பாஷா ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.அதனை தொடர்ந்து டிரைவர் இம்ரான் பாஷா ஜாமீன் கேட்ட வழக்கு இன்று நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.

மேலும் படிக்க | ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான்- உதயநிதி

ஜாமீன் வழங்க எதிர்ப்பு 

காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் வினோத் ஆஜராகி, டாக்டர் மஸ்தான் மரணம் தொடர்பான  விசாரணை ஆரம்ப கட்ட இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.இதையடுத்து, டிரைவர் இம்ரான்பாஷா ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.