பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

விருத்தாச்சலம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
Published on
Updated on
1 min read

விருத்தாச்சலம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்பு கடலூர் சாலையில், தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை துறை சார்பில்  போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் சாலையின் ஓரம் வரிசையாக நின்று போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

இதில் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் கலையரசன், அரசு நடமாடும் மருத்துவர் குழுவை சேர்ந்த ஜெயகோபி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராஜ கண்ணன், மருந்து ஆளுநர் சிவா,  கிருஷ்ணமூர்த்தி, ராஜராஜ சோழன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com