தமிழ்நாட்டில் வரும் 25 ஆம் தேதி வரை...சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வரும் 25 ஆம் தேதி வரை...சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை...CBCID விசாரணை தொடக்கம்...!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வெப்பநிலையானது குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 34 டிகிரி செல்சியையொட்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.