கனமழையால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைவு- விலை உயரும் அபாயம்

வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது.இதன் காரணமாக காய்கறி விலை உயர்ந்துள்ளது.

கனமழையால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைவு- விலை உயரும் அபாயம்

வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது.இதன் காரணமாக காய்கறி விலை உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காய்கறிகள் விநியோகம் செய்யப்படுகிறது.கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா,கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதியாகும். ஆனால் தற்போது அந்த மாநிலங்களில் மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரத்து என்பது குறைந்துள்ளது.இதனால் காய்கறிகளின் விலை என்பது அதிகரித்துள்ளது.ஒரு கிலோ பெரிய வெங்காயம் 50 ரூபாய்க்கும்,சின்ன வெங்காயம் 45 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது,அதே போல் கத்தரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் உருளை கிழங்கு 30 ரூபாய்க்கும்,அவரைக்காய் 55 ரூபாய்க்கும் பீட்ரூட்  மற்றும் முள்ளங்கி 35 ரூபாய்க்கும் இஞ்சி 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.கடந்த சில வாரங்களாக தொடர்ந்து விலை ஏறி வந்த தக்காளி விலை சற்று குறைந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய படுகிறது.  

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காய்கறி வியாபாரி வெளி மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது.இதனால் காய்கறியின் விலை என்பது அதிகரித்துள்ளது.இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.காய்கறி விலை அதிகரித்து உள்ளதால் மக்களின் வருகை குறைந்து வியாபாரம் மந்தமாகி உள்ளது என்றார்.