"மைக்காலே மண்டைய உடைப்பேன்" எனக் கூறும் ஆட்சியர் ; கண்டுக்கொள்ளாமல், ரீல்ஸ் பார்க்கும் அதிகாரிகள்!

"மைக்காலே மண்டைய உடைப்பேன்" எனக் கூறும் ஆட்சியர் ; கண்டுக்கொள்ளாமல், ரீல்ஸ் பார்க்கும் அதிகாரிகள்!

திருவண்ணாமலை: ஆய்வு கூட்டத்தில், ஆட்சியர் கோபமடைந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல் மற்ற அதிகாரிகள் சமூக வலைத்தளங்களில் மூழ்கியிருந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட 37 ஊராட்சிகளில் உள்ள திட்ட பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் புதுப்பாளையம் தனியார் மண்டபத்தில் ஆய்வு கூட்டம்  ஒன்று நடைபெற்றுள்ளது.

அப்பொழுது, ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களை அழைத்து ஊராட்சிகளில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்த கையேடுகளை ஆய்வு மேற்கொண்டு, அவர்களிடம் அதுகுறித்து விபரங்களைக் கேட்டறிந்தார், ஆட்சியர்.

அப்போது பெரும்பாலானோர் பணி செய்யாமலேயே பணி நடந்ததாகவும் இதே போன்று காலம் தாழ்த்தி பணிகள் நடைபெற்று இருப்பதையும் கண்டுபிடித்த ஆட்சியர் ஆவேசமடைந்தார். அப்போது கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர்.  பெண் வட்டார வளர்ச்சி அலுவலரை கையில் இருக்கும் மைக்கால் மண்டையை உடைப்பேன் எனக் கூறியும் ஏதவாது பணி நடக்கவில்லை என்றால் என்னிடம் கூறுங்கள், எனக்கு எம்.எல்.ஏ தெரியும், அமைச்சர் தெரியும் நான் பேசுகிறேன் என தெரிவித்தார். 

ஆனால், அதிகாரிகளோ இன்ஸ்டா,ரீல்ஸ், யூடிப்பில் வரும் டான்ஸ் வீடியோக்களை ஜாலியாக பார்த்து கொண்டிருந்தனர்.

குழந்தைகளுக்கான நலத்திட்ட பணிகளில் கவனக்குறைவாக இருக்காதீங்க என எச்சரித்து கடும் கோபத்தில் இருந்த மாவட்ட ஆட்சியரை கொஞ்சம் கூட மதிக்காத அதிகாரிகள் ஏதோ விழாவுக்கு வந்தது போல் தங்களுக்கென்ன வந்தது என்றார் போல் சமூக வலைத்தளங்களில் வரும் டான்ஸ் வீடியோக்களை ஜாலியாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

இதையும் படிக்க: "விடை கொடு சாமி, விட்டு போகின்றேன்": கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போன மாணவி!