15 நாட்களுக்கும் மேலாக இயங்காமல் இருக்கும் இ-சேவை மையம்...! பொதுமக்கள் அவதி...!

மேட்டூர் அருகே தூக்கணாம்பட்டியில் இயங்கி வந்த இ-சேவை மையம் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மூடி இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

15 நாட்களுக்கும் மேலாக இயங்காமல் இருக்கும் இ-சேவை மையம்...! பொதுமக்கள் அவதி...!

சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதியில் சுமார் 2.85 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து வகையான சான்றுகளும் இ-சேவை மையத்தின் மூலமாக பதிவு செய்த பின்னரே பெற முடிகிறது. இதற்காக மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம்,  தூக்கணாம்பட்டியில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மட்டுமே செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூக்கணாம்பட்டி இ-சேவை மையம் கடந்த 15 நாட்களாக மூடி இருப்பதால் பொதுமக்களும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், தூக்கணாம்பட்டி இ-சேவை மையத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.