கடற்கரை சுத்தப்படுத்த களமிறங்கிய அமைச்சர்!

கடற்கரையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் கடல் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் அதனால் பிளாஸ்டிக் பதிலாக மஞ்சள் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடற்கரை சுத்தப்படுத்த களமிறங்கிய அமைச்சர்!

சர்வதேச கடலோர சுத்தப்படுத்தும் நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவங்கிவைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ், சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் வி.இ.மதியழகன், சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.

கடற்கரையை சுத்தம் செய்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரம் நீலாங்கரை கபாலீஸ்வரர் கடற்கரையில் நடைபெற்றது. கடற்கரையில் குப்பை கொட்டுவதுபோலும், மீன்கள் பிளாஸ்டிக் உண்ணது வயிற்றில் உள்ளது போன்றும் உருவாக்கிய மணல் சிற்பத்தை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்.

பின்னர் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகைற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து நடமாடும் பிளாள்டிக் விழிப்புணர்வு வேனை பச்சை கொடியசைத்து துவக்கிவைத்தார். நாம் செல்லும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்வோம் என்ற கையெழுத்து பிரச்சாரத்தை அமைச்சர் கையெழுத்திட்டு துவக்கிவைத்தார். கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் பத்து ரூபாய் செலுத்தினால் மஞ்சப்பை பெரும் இயந்திரத்தை அமைச்சர் தொடங்கிவைத்தார்.

இதில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து மேடையில் பொதுமக்களிடையே அமைச்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தூய்மை பணியாளர்களுக்கு புதிய நடமாடும் குப்பை தொட்டியை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com