ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்ட ஈபிஎஸ்...புதிய நீதி கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்த ஓபிஎஸ்!

ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்ட ஈபிஎஸ்...புதிய நீதி கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்த ஓபிஎஸ்!

சேலத்தில்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணி தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 


சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கே.பி. முனுசாமி, ராஜேந்திர பாலாஜி, தம்பிதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் சின்னம் பெறுவது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.  

இதையும் படிக்க : அதிர்ச்சியில் உறையும் ஐ.டி ஊழியர்கள்... பணி நீக்கம் தீர்வாகுமா?

இதனிடையே சென்னை தியாகராய நகரில் உள்ள புதிய நீதி கட்சி அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஏ.சி. சண்முகத்தை சந்தித்தார். புதிய நீதி கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த ஓ.பி.எஸ்.சை, ஏ.சி. சண்முகம் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். 

இந்த சந்திப்புக்கு  பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியிடப்படும் என்றார்.