மிக மோசமான தோல்வியை மறைக்கவே ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.  அறிக்கை... அமைச்சர் பெரிய கருப்பன் பதிலடி...

கட்சியிலுள்ள மீதி தொண்டர்களை தக்க வைக்கவும், தேர்தல்களில் மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தும், அதிமுகாவின் மிக மோசமான தோல்வி மறைக்கவே  ஈபிஎஸ் , ஒ.பி.எஸ் அறிக்கை - அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

மிக மோசமான தோல்வியை மறைக்கவே ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.  அறிக்கை... அமைச்சர் பெரிய கருப்பன் பதிலடி...

தமிழகத்தில் நடந்து முடிந்த 9  மாவட்டங்களுக்காக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது இதற்கு வரலாறு காணாத வன்முறையும், ஜனநாயக அக்கிரமங்களும் தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைபட்சமான நடவடிக்கைகளால் அதிமுக தோல்வியடைந்ததாக அதிமுக தலைமை ஒ.பி.எஸ். இ.பி எஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இதற்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறும் போது .இரண்டு கட்டங்களாக நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் 5 மாத நல் ஆட்சியே திமுக மிகப் பெரிய வெற்றி என்று கூறினார். மேலும்  வேட்பாளர்களின் ஐயப்பாடுகளால் சில இடங்களில்  தேர்தல் முடிவுகள்  காலதாமதம் ஆனதற்கு காரணம் என்றும் மக்களிடம் 10 ஆண்டு கால ஆட்சியின் சாதனையை சொல்லி வெற்றி பெற வேண்டிய அதிமுக அதை செய்ய தவறி விட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில்  நிர்வாக சீர்கேடுகளினால் தமிழகம் பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கிறது என்பதை  உணர்ந்த மக்கள் திமுகவுக்கு வாக்களித்து மிகப் பெரிய வெற்றியை தந்துள்ளனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து மக்கள் 4வது முறையாக திமுகவுக்கு வாக்களித்து வெற்றியை தந்துள்ளனர். அதிமுக தலைமை மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் அரசும், ஆணையமும் முறையாக செயல்பட்டது என்று கூறி இருக்க வேண்டும். எல்லாவற்றையும்  மக்கள் உண்ணிப்பாக கவனித்து வருகிறார்கள்.   ஒ.பி.எஸ் , இ பி.எஸ்  நன்றி மறந்தவர்கள் , விசுவாசம் இல்லாதவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.
அதிமுக வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். அடையாளம் தந்தவர் மரணத்தை வைத்து நாடகம் நடத்தியவர்கள் தானே  கொடநாடு கொலை , கொள்ளை அதிமுக ஆட்சியில் நடவடிக்கை இல்லை. தற்போது நீதிமன்றம் மூலம் உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது என்றார்.
 
மக்களுடைய அரசான திமுகவை மேலும் விமர்சித்தால் அதிமுகவுக்கு  இப்போது கிடைத்த வாக்குகளும் அடுத்த தேர்தலில் கிடைக்காது. உலக ஊடகங்கள் புகழும் நல்லாட்சி தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்து வருகிறது. 5 மாதகால நல்லாட்சியே திமுகவின்  மகத்தான வெற்றி இரு வேறு திசையில் பயணிப்பவர்கள் அறிக்கையில் மட்டுமே இணைந்துள்ளனர்.

தொண்டர்களின் உணர்வுகளையும் இழந்த இயக்கமாக உள்ளது அதிமுக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வின் கொள்கைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உயிர்  உடமையும் காப்பாற்ற முடியாத வக்கற்றவர்கள். தேர்தல் ஆணையத்தில் ஆதாரம் இல்லாத புகார் நடவடிக்கை இல்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

மீதி தொண்டர்களை தக்க வைக்கவும்  தேர்தல்களில் மக்களால் புறக்கணிக்கப் பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தும் அ.தி.மு.க.வின் மிக  மோசமான தோல்வியை மறைக்கவே இ.பி.எஸ்., ஒ.பி.எஸ்., அறிக்கை என அமைச்சர் பெரியகருப்பன் பதிலடி கொடுத்துள்ளார்.