இரங்கல் சொன்ன இபிஎஸ்.... வாழ்த்து தொிவித்த  அஜித்...

இரங்கல் சொன்ன இபிஎஸ்.... வாழ்த்து தொிவித்த  அஜித்...
Published on
Updated on
1 min read

நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கல்  தெரிவித்துள்ளார்.

திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் தந்தை கடந்த மார்ச் 24 தேதி காலமானார். இச்செய்தியை கேள்விப்பட்டு ரசிகர்கள் பலர் அஜித் தின் வீட்டின் முன்பு குவியத் தொடங்கினர் . மேலும் திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர்  நோில் சென்று தங்களது அஞ்சலி செலுத்தி  நடிகர் அஜித்துக்கு அறுதல் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து  அவர்  தந்தையின் இறுதிச் சடங்கை தன் விருப்பத்தின்படியே முறையாக  நடத்த ஒத்துழைப்பு தரும்படி நடிகர், சமுக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்றுப் பலரும் அன்றைய தினம் அஜித்தைத் தந்தை மறைவுக்கு அஞ்சலி செலுத்தாமல் மறுநாளிலிருந்து நேரில் சென்று தங்களது  இரங்கல்களை தெரிவித்தனர். 

இந்நிலையில் தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தொலைப்பேசி வாயிலாக அஜித்தை  தொடர்பு கொண்டு இரங்கல் செய்தியை தெரிவித்தார் .அதற்கு நடிகர் அஜித் நன்றி தெரிவித்து பின்னர் அதிமுகவின்  பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதற்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

-முருகானந்தம்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com