பாஜக நிா்வாகியால் எரிக்கப்பட்ட இபிஎஸ் உருவப்படம்.... நடவடிக்கை?!!

பாஜக நிா்வாகியால் எரிக்கப்பட்ட இபிஎஸ் உருவப்படம்.... நடவடிக்கை?!!

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தினை எரித்த பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தினை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் அக்கட்சியில் இருந்து 6 மாதகாலத்திற்கு தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கைதும் ஜாமீனும்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி விலக்கு அருகே பாஜக வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் கடந்த 7ம் தேதி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உருவ படத்தினை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர். 

அதிமுக எதிர்ப்பு:

இந்த சம்பவத்திற்கு அதிமுக தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இதனை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் எடப்பாடி பழனிச்சாமி படத்தினை எரித்தவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், கோவிபட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்து இருந்தார்.  

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தினேஷ் ரோடி கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியில் மாவட்ட செயலாளர் வெங்கேடசன் சென்னகேசவன் தெரிவித்துள்ளார்.  

அறிவிப்பு:

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் நிலைபாட்டினை மீறி  தன்னிச்சையாக செயல்படுவதாலும் தினேஷ் ரோடி வகிக்கும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு விலக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:   ”பேனா சின்னம் இல்லை....” தமிழிசை சௌந்தரராஜன்!!!