பொங்கலுக்கு சேலை வேட்டி வழங்க வேண்டும் - இபிஎஸ் அறிக்கை

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு ரேசன் அட்டை தாரர்களுக்கு வேட்டி சேலை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பொங்கலுக்கு சேலை வேட்டி வழங்க வேண்டும் -   இபிஎஸ் அறிக்கை

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு  இந்ததாண்டு ரேசன் அட்டை தாரர்களுக்கு  ரூ.1000 மற்றும் சர்க்கரை ஆரிசி கரும்பு  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் எனவும்  அதற்கான டோக்கன்கள் ஜனவரி 2 தேதி முதல் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

 முதலில் தமிழக அரசு சார்பில் கரும்பு வழங்கப்படமாட்டாது எனவும் மீண்டும் நீண்ட ஆலோசனைக்கு பிறகு கரும்பு வழங்கும் அறிவிப்பை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரும்பு வழங்கப்படும் என உத்தரவை பிறப்பித்தார். 

மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 39-ஆவது பலி - பாமக ராமதாசு வலியுறுத்தல்

 இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் தைப் பொங்கலுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி - சேலைகளை குறித்த காலத்தில் வழங்க வேண்டுமென திமுக அரசிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.  2023-ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி - சேலை நெய்யும் பணி தாமதமாக தொடங்கியதாகவும், தரமற்ற முறையில் நூல் வழங்கியதால் நெசவாளர்கள் தவித்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க | வாக்காளர் அட்டை-ஆதார் இணைப்பு : இன்று ஆலோசனை

மேலும் குளறுபடிகளை களைந்து குறித்த காலத்தில் வேட்டி சேலைகளை வழங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிக்கை மூலம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.