"2026-ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜக கூட்டணி இல்லை" எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

"2026-ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜக கூட்டணி இல்லை" எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அதிமுக குறித்து ஸ்டாலின் அதிகம் விமர்சித்து வருவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "எங்களைப் பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். அதனால் முதலமைச்சர் ஸ்டாலின் பயந்து நடுங்கி வருகிறார். சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்வது போல திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தனர். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு சிறுபான்மை மக்கள் எங்களை சந்திப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் வெறுப்பு பேச்சு பேசி வருகிறார்" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பேசிய அவர். "இந்தியா கூட்டணி நிலைக்குமா நிலைக்காதா என்பது குறித்து எதிர்காலத்தில் தான் தெரியும். கொள்ளையடிப்பதற்கும், கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றிக் கொள்வதற்குமே திமுக கூட்டணி அமைக்கிறது" என விமர்சித்துள்ளார்.

மேலும், " 2024-அம் ஆண்டில் மட்டுமல்லாமல் 2026-ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜக கூட்டணியில் அதிமுக இணையாது என தெரிவித்தார்" எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.