"அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவமனைகள்; ஆனால் திமுக ஆட்சியில்?" இபிஎஸ்!!

எத்தனை வழக்குகள் தொடா்ந்தாலும் அதிமுக ஆட்சிக்கு வருவது உறுதி என அக்கட்சியின் பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி தொிவித்துள்ளாா். 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசுகையில், இரண்டரை ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ  கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதைக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, இந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் திமுக ஒரு அரசு மருத்துவமனையோ, மருத்துவக் கல்லூரியையோ அமைக்கப்படவில்லை என்று சாடினார். 

தொடா்ந்து பேசிய அவா், தமிழ்நாடு போதை மாநிலமாக மாறிவிட்டது எனவும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் தினம்தோறும் நடப்பதாகவும் விமா்சித்தாா். மேலும் எத்தனை வழக்குகள் தொடா்ந்தாலும் அதிமுக ஆட்சிக்கு வருவது உறுதி என்று பேசியுள்ளார்.

இதையும் படிக்க ||  காவல்துறையின் நடவடிக்கையில் தொய்வு... சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்ற விஜயலட்சுமி!!