மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் எடப்பாடி பழனிசாமி..

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் எடப்பாடி பழனிசாமி..
Published on
Updated on
1 min read

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார்.


தமிழக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.  எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் 19ம் தேதி குடலிரக்கம் அறுவை சிகிச்சை இதே எம்ஜெம் மருத்துவமனையில் செய்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று லேசான வயிறு வலி இருப்பதன் காரணமாக இன்று காலை 6.30மணிக்கு பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்பொழுது அவருக்கு என்டாஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உரிய மருத்துவ அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 8மணி நேர பரிசோதனைக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பினார்.

பரிசோதனைக்காக மட்டுமே வருகை தந்ததன் காரணமாக மருத்துவமனைக்கு அதிமுக வினர் நலம் விசாரிக்க வரவேண்டாம் என அவர் அறிவுறுத்தியதால் அதிமுகவினர் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com