நவீனமயமாகும் எழும்பூர் ரயில்நிலையம்.. 400 கோடி ரூபாய் மதிப்பீடு.. அறிக்கை வெளியிட்ட தெற்கு ரயில்வே!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாகிறது  இதையொட்டி விரிவான பெருந்திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

நவீனமயமாகும் எழும்பூர் ரயில்நிலையம்..  400 கோடி ரூபாய் மதிப்பீடு.. அறிக்கை வெளியிட்ட தெற்கு ரயில்வே!

தென் மாநிலங்களின் முக்கிய ரயில் நிலையமான எழும்பூர் ரயில் நிலையத்தினை நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் அதனை 400 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி தொடங்குவதற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம், பயணிகள் நடைபாதை பாலங்கள் தரம் உயர்த்தப்படும் பணி, ஓய்வறை வசதிகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில் பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.