2 ஆண்டுகள் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு...! துண்டிக்க மின்வாரியம் உத்தரவு...!!

2 ஆண்டுகள் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு...! துண்டிக்க மின்வாரியம் உத்தரவு...!!
Published on
Updated on
1 min read

2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பை துண்டிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின்வாரிய தலைவர் தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

இதனை ஒட்டி மின் வாரிய வருவாய் பிரிவின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் அனுப்பிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில், 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பை அகற்றுவதோடு, கணக்கையும் முடித்து வைக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார விநியோக சட்டத்தில், "தாழ்வழுத்த பிரிவின் கீழ் மின் இணைப்பு பெற்ற நுகர்வோர், 2 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத இணைப்பை புதுப்பிக்க கோரும்போது, அவரை புதிய விண்ணப்பதாரராக கருத வேண்டும் எனவும், அவரிடம் இருந்து நிலுவைத் தொகை மற்றும் புதிய இணைப்புக்கான கட்டணத்தை வசூலித்த பிறகே மின் விநியோகம் வழங்க வேண்டும்" என்று உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இதனை பொறியாளர்கள் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதோடு,  2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டதை நேரடியாக உறுதி செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளது. அதற்கான கணக்கு முடிக்கும் பணிகளை மே 31-ம் தேதிக்குள் முடிக்குமாறு அலுவலர்களுக்கு மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் இது தொடர்பான அறிக்கையை வாரந்தோறும் தலைமையகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும், மின் வாரிய வருவாய் பிரிவின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com