மின் கட்டண உயர்வால்...நிறுவனங்கள் இடம்பெயரும் அவலம்...தொழில் முனைவோர்கள் வேதனை!

மின் கட்டண உயர்வால்...நிறுவனங்கள் இடம்பெயரும் அவலம்...தொழில் முனைவோர்கள் வேதனை!

மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு  இடம்பெயரும் அபாயம்  ஏற்பட்டுள்ளதாக ஓசூர் தொழில் முனைவோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மின்கட்டணம் உயர்வு:

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். அதன்படி கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்தது. இதனால் பல்வேறு தொழிற்சாலைகளும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.

வளர்ந்து வரும் தொழில் நகரம்:

இந்நிலையில், வளர்ந்து வரும் தொழில் நகரமான ஓசூர் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தால்  கடுமையான பாதிப்பை சந்திக்க உள்ளதாக ஓசூர் பகுதி தொழில் முனைவோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: 4-வது நாளாக நீடிக்கும் வேலைநிறுத்தம்...முதலமைச்சர் தலையிட வேண்டும்...தொழிலாளர்கள் கோரிக்கை!

தொழில் நிறுவனங்கள் மூடல்:

2016-ம் ஆண்டிலிருந்து பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, எரிபொருள் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் தொடர் பாதிப்புகளைச் சந்தித்து வந்த நிலையில், கொரோனா மற்றும் ஊரடங்கால் ஓசூர் பகுதியில் மட்டும் 25 சதவீதத்திற்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

நிறுவனங்கள் இடம்பெயரும் சூழல் நிலவியுள்ளது:

இந்த நிலையில் தற்போது மின் கட்டண உயர்வு என்பது தலை மேல் இடியாக இறங்கியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். மின்கட்டண உயர்வால் ஓசூர் பகுதிகளில் இயங்கி வரும் நிறுவனங்கள் அனைத்தும் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயரும் சூழல் உருவாகி வருவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.