"அடக்கப்பட்டோருக்கு குரல் கொடுத்தவர் இமானுவேல்" - மு.க.ஸ்டாலின் ட்வீட்!

"அடக்கப்பட்டோருக்கு குரல் கொடுத்தவர் இமானுவேல்" - மு.க.ஸ்டாலின் ட்வீட்!

இமானுவேல் சேகரனின் 65வது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அவரை நினைவு கூர்ந்துள்ளார். 

இமானுவேல் சேகரனின் நினைவு தினம்:

இமானுவேல் சேகரனின் நினைவு தினமான இன்று, ராமநாதபுரம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் ட்வீட்:

இந்நிலையில், அடக்கப்பட்ட இன மக்களின் அடையாளத்தையும் சுயமரியாதையையும் நிலைநிறுத்த அவர்களை அணிதிரட்டியவர் இமானுவேல் என முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: தெலுங்கு திரையுலகின் ”ரெபல் ஸ்டார் ” காலமானார்.. அரசியலிலும், சினிமாவிலும் தடம் பதித்தவர்..!

இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போராடிய இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளான இன்று, அவரது போராட்டங்களையும் தியாகத்தையும் நினைவுகூர்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.