புது வண்ணாரப்பேட்டையில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்...பரப்பரப்பு!!

புது வண்ணாரப்பேட்டையில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்...பரப்பரப்பு!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்து இடையூறாக இருந்த கடைகளை மாநாகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு மார்க்கெட் பகுதியில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்  கடந்த 30 ஆண்டுகளாக காய்கறி வியாபாரிகள், பூ வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் போட்டு வியாபாரம் செய்து வந்தனர்.

தண்டையார்பேட்டையில் இருந்து புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் தூண்கள் அமைக்கப்பட்டதால் சாலையின் அளவு குறுகியது.  குறுகிய சாலையில் காய்கறிகள் பழ கடைகள், பூ, கடைகள், தள்ளு வண்டி கடைகள், மாலை கடைகள் உள்ளிட்ட கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் மாநகரப் பேருந்து கழகத்திடமிருந்து தொடர்ந்து மாநகராட்சிக்கு புகார் வந்ததால் தண்டையார்பேட்டை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் தேவராஜ் தலைமையில் இளை நிலை பொறியாளர் ராமகிருஷ்ணன், புதுவண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன்  சாலையில் ஓரத்தில் ஆக்கிரமிப்பு போடப்பட்ட  கடைகளை  அகற்றினர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க:    சென்னையில் புகாரை வாபஸ் பெற அழைத்து தாக்கிய சம்பவம்...!!