ஆபாச படம் அனுப்பி பணம் பறித்த பொறியாளர் உட்பட 2 பேர் கைது.!!!

கரூரில் ஆபாச படம் அனுப்பி, பணம் பறித்த பொறியாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆபாச படம் அனுப்பி பணம் பறித்த பொறியாளர் உட்பட 2 பேர் கைது.!!!
Published on
Updated on
1 min read

கரூரில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் பெண்ணின் கணவரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அடையாளம் தெரியாத பெண்ணின் ஆபாச படம் வந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ந்த அவருக்கு செல்போனில் அழைத்த மர்ம நபர் ஒருவர் தான் அனுப்பிய படத்தை போலவே உனது மனைவியின் படத்தையும் வலைதளத்தில் அனுப்புவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் அப்படி செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் கேட்டுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த வங்கி அதிகாரியின் கணவர் ஜிபே மூலமாக 49ஆயிரம் பணம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்த அறிந்த பெண் வங்கி அதிகாரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், செல்போன் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு பொள்ளாச்சியை சேர்ந்த பொறியாளார் பிரசாந்த் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கொத்தனாரையும் கைது செய்தனர். .  அவர்களிடம் இருந்து 3 லட்சம் ரொக்கம், இரு சக்கர வாகனம், பாஸ்போர்ட், 4 செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com