ஆகஸ்ட் 18 முதல் தொடங்குகிறது... இன்ஜினியரிங் ஆன்லைன் கிளாஸ்...

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அடுத்த மாதம் 18ம் தேதி வகுப்புகள் தொடங்குகிறது.

ஆகஸ்ட் 18 முதல் தொடங்குகிறது... இன்ஜினியரிங் ஆன்லைன் கிளாஸ்...
கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான சேர்க்கையும்  450க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் நடந்து வருகிறது. கடந்த இரு நாட்களில் ஆன்லைன் வாயிலாக 41 ஆயிரத்து 363 பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
 
இந்தநிலையில் ஆகஸ்ட் 18 முதல் 2, 3 மற்றும் 4ம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் வகுப்புகளை ஆன்லையின் வாயிலாக தொடங்க உறுப்பு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்த வகுப்புகளை நவம்பர் 30க்குள் நடத்தி முடித்து, டிசம்பர் 2ல் செய்முறை தேர்வுகளையும், டிசம்பர் 13ல்  செமஸ்டர் தேர்வுகளையும் தொடங்கவும் அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது 2022 ஜனவரி 19ல் புதிய செமஸ்டர் வகுப்புகளையும்  தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.