”நெஞ்சுவலி செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த திமுகவுக்குமே தான்” - டிடிவி விமர்சனம்!

”நெஞ்சுவலி செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த திமுகவுக்குமே தான்” - டிடிவி விமர்சனம்!

செந்தில்பாலாஜிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திமுகவுக்கே நெஞ்சு வலி வந்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துக் கொண்டு உரையாற்றினார். 

இதையும் படிக்க : மின்தடைக்கு காரணம்...விளக்கமளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

அப்போது பேசிய அவர், அதி புத்திசாலித்தனம் என்றைக்குமே ஆபத்தானது என்பதை செந்தில் பாலாஜி நிரூபித்திருப்பதாக கூறினார். ஆர்.கே.நகரில் நான் வெற்றி பெற்றதை கூட முதலிலேயே கணித்தவர் தான் செந்தில் பாலாஜி. அப்படி புத்திசாலித்தனமாக செயல்பட்டவர், அமலாக்கத் துறை சோதனையை நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார் என்றும், அமலாக்கத் துறையினரிடம் பொய் சொல்ல முடியாது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நெஞ்சுவலி வந்தது செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுகவுக்கே வந்துள்ளதாக விமர்சித்தார்.