ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - பொன்முடி பேச்சு!

ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - பொன்முடி பேச்சு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கட்சிப் பாகுபாடு மற்றும் சாதிய வேறுபாடின்றி தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றும் முகாம்,  நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் விண்ணப்பதிவு முகாமை அமைச்சர் பொன்முடி, நேரில் பார்வையிட்டார்.

இதையும் படிக்க : லாரி மோதிய விபத்தில் 2 பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றும் பணி கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருவதாகவும், கட்சிப் பாகுபாடின்றி, சாதிய வேறுபாடின்றி, தகுதி வாய்ந்த அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 65 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், ஏறக்குறையை ஒரு கோடி அட்டைதாரர்களுக்கு உரிமைத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.