சம வேலைக்கு சம ஊதியம்!!! ஆசிரியர்களின் 5 நாள் தொடர் போராட்டமும் : தமிழக அரசின் மெளனமும்

இடைநிலை ஆசிரியர்கள் 2500 க்கும் மேற்பட்டோர் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி தொடர்ந்து 5- வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம்!!! ஆசிரியர்களின்  5 நாள் தொடர் போராட்டமும் : தமிழக அரசின் மெளனமும்

ஆசிரியர்களின் போராட்டத்தின் காரணம் 

 சம வேலைக்கு சம ஊதியம் 

 தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 31- ம் தேதி பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒருவித சம்பளமும் 2009 ஜூன் 1- ம் தேதி சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு  ஒருவித சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படி இவர்களுக்குள் சம்பள வித்தியாசமானது ரூ.3,170 ஆகும் . இதனால் கிட்டதட்ட 20,000 க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் சுமார் 2500 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிசம்பர் 27 தேதி தொடங்கிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே வந்த நிலையில் 5- வது நாளை எட்டியுள்ளது. 5 நாட்கள் தொடர் போராட்டத்தில் 2500 பேர் கலந்துகொண்ட நிலையில் 147 உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

அரசியல்வாதிகளின் சந்திப்பும்  தமிழக அரசுக்கு கோரிக்கையும் 

வி.பி. துரைசாமி 

பாரதிய ஜனதா கட்சியின் துனைத்தலைவர் வி.பி. துரைசாமி போராட்டக்களத்திற்கு வருகைதந்திருந்தார். அப்போது அவர் பேசுகையில் தமிழ்நாடு சட்டப்பேரவை 2023  ஜனவரி  9  கூடுகிறது . இடைநிலை நிலை பதவி வழங்கவும் ஊதியம் வழங்கவும் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை இடம்பெறவேண்டும். 

  திமுக அரசின்  311 வது வரிசையில் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றவேண்டும் . தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் . சட்டபேரவை கூடுகையில் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். தரம் பார்க்கமால் கல்வித்துறை அமைச்சர் பேசி நிறைவேற்ற வேண்டும். பாஜகவின் தலைவர் அண்ணாமலை ஆசிரியர்களோடு என்றும்  இருப்பார். பாடம் சொல்லிக்கொடுக்கும் வாத்தியார்களிடம் தப்பு பண்ணகூடாது எனவும் கூறினார்.

அன்பில் மகேஷ்க்கு சீமானின் கோரிக்கை

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல.ஆசிரியர்களின் கோரிக்கை நேர்மையானது. புனிதமானது . தமிழக அரசு பள்ளிக்கூடங்கள் கட்டிகொடுக்க நிதி ஒதுக்கவது நியாயம் ஆனால் வகுப்பு எடுப்பவர்கள் தெருவில் இருக்கிறார்கள். தமிழக அரசு சென்று வகுப்பு எடுக்குமா? பார்த்து படிக்கும் போதே 10 பிழை நீங்கள் பாடம் நடத்துனா எப்படி இருக்கும் மாணவன் உருப்புடுவான் . ஆசிரியர்களை ஏமாற்றமால் உடனடியாக கோரிக்கையே நிறைவேற்றவேண்டும் திமுக அரசு எனவும் கூறினார்.

 அன்பில் மகேஷ்க்கு வேண்டுகோள்

ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதற்கு எல்லாம் நாம் வெட்கி தலைகுனிய வேண்டும், சின்ன சின்ன நாடுகள் வளர்ந்து நிற்கிறது. பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு என் சிறிய வேண்டுகோள் போராட்டத்தை முடித்து வையுங்கள் நான் கோரிக்கை வைத்து முறையிடுகின்ற இடத்தில் இருக்கின்றனர் எனவும் முடித்தார்.

மக்களை ஏமாற்றும் செயல் - டி டிவி தினகரன்

இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம் கடந்த  2019லும் நடைபெற்றது இந்த போராட்டத்தில் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது பேசியிருந்தார் மு.க. ஸ்டாலின். முதலமைச்சர் தயவுச் செய்து வேகமாக நிறைவேற்ற வேண்டும். நியாயமான கோரிக்கை தமிழக அரசின் செயல்பாடு வேதனை அளிக்கிறது . மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கிறது . அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகும்.விசித்திரமாகவும் வேதனையாகவும் இருக்கு. மக்கள் வெகுண்டு எழுந்து போராட்டம் நடத்துவார்கள் எனவும் கூறி சென்றார்.

திருமாவளவன் கோரிக்கை 

 இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில், “இடைநிலை ஆசிரியர்களுக்கிடையில் நிலவும் ஊதியபாகுபாடு களையப்பட வேண்டும். ஒரு நாள் முன்பின் (2009 மே31; ஜூன்01) பணியில் சேர்ந்தவர்களுக்கிடையில் ரூ.15000க்கும் மேல் இடைவெளி இருப்பது வேதனைக்குரியது. 10 ஆண்டு காலமாகப் போராடும் ஆசிரியர்களுக்குப் இதனைப் பொங்கல் பரிசாக அறிவிக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி எனும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.  போதிய வருமானமின்றியும் இது நிரந்தரப் பணியாகும் என்கிற நம்பிக்கையோடு பணியாற்றி வருகின்றனர்.  வேறு பணி ஏதுமின்றி முழுநேரமாகவே பகுதிநேரப் பணியை ஆற்றி வருகின்றனர். இவர்களின் பணி அனுபவத்தை வரையறையாகக் கொண்டு இவர்கள் அனைவரையும்  பணியில் நிரந்தரம் செய்ய வேண்டுமென மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை  தோல்வி 

 தமிழக அரசு ஊதிய முரண்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடித்தது. அதன் பெயரில் தமிழக அரசின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாலருடன் ஆசிரியர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

முதலமைச்சர் தான்முடிவு எடுப்பார் - அன்பில் மகேஸ் 
 இடைநிலை ஆசிரியர் போராட்ட விவகாரத்தில் முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என கூறினார். அதுமட்டுமின்றி பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. 
 

 போராட்டம் தொடரும் ஆசிரியர்கள் அறிவிப்பு  

நாளை முதல் உலகமே ஆங்கில புத்தாண்டை வரவேற்க தொடங்கியிருக்கும் நிலையில் ஆசிரியர்களின் போராட்டம் தொடந்துகொண்டியிருக்கிறது.

தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தை ஆசிரியர்களுக்கு திருப்தி அளிக்காததால் எங்களின் போராட்டமானது தொடரும் எனவும். முதலமைச்சரின் ஒப்புதலுக்கு நாங்கள் காத்திருக்கிறோம் எனவும் கூறுகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com