ஈரோடு: பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..!

ஈரோடு:  பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..!

அந்தியூர் அருகே பழுதடைந்த சாலையால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூரில் இருந்து அந்தியூர் செல்லும் முக்கிய சாலையில் மரவபாளையம் என்ற இடத்தில் சாலை பழுதடைந்து பல மாதங்கள் ஆகிய நிலையில் பராமரிப்பு பணி ஏதும் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் வெள்ளிதிருப்பூரில் இருந்து மரவபாளையம்  வழியாக அந்தியூர் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.

 மேலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் வருவோர் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படுவதாக  அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

எனவே அரசு மெத்தனம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்பது மரவபாளையம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிக்க  | ”பலவீனமான பெண்கள்” - குடியரசு தலைவரை அவமதிக்கும் வகையில் விமர்சிக்கிறார் கார்கே” - நிர்மலா சீதாராமன்